வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

7. எலும்பும் தசையும்

எலும்புக்கூடே உடம்பிற்கு வடிவு கொடுத்து நம்மை நேராக நிற்கச் செய்யும். இப்போதிருக்கும் முறைப்படி எலும்புச் சட்டம் அமையாமற்போனால் புழுக்கள் போல நிலத்தின்மீது நாம் நகர வேண்டுவதாய் இருக்கும். நமது உடம்பில் இருநூற்றாறு எலும்புகள் இருக்கின்றன. அவற்றில் இரத்தக் குழாய்களும் நரம்புகளும் உள்ளன. உடம்பின் ஒவ் வோர் உறுப்பின் உபயோகத்திற்கேற்றபடி அங் கங்கே உள்ள எலும்பின் வடிவம் அமைந்திருக் கிறது. தலையோடு கிட்டத்தட்ட ஒரு பெரிய வட்டப் பந்து போல அமைந்திருக்கிறது. அஃது உட்பக்கம் குழிந்திருப்பதால், மூளை தங்குவதற்கு அஃது இடமாய் இருக்கிறது. மூளையை அது பாதுகாக்கின்றது. விலா எலும்புக்கூடு, இருதயத்தையும் சுவாசப் பையையும் பாதுகாக்கும் பெட்டிபோல இருக்கிறது. கால் கை எலும்புகள் நீளமாயும் ஒடுக்கமாயும் இருப்பதால், அவ்வுறுப்புகளைத் தாராளமாயும் விரைவாயும் அசைத்தல் முடிகின்றது. சிறு பிள்ளை எலும்புகள் மிக மெதுவாயிருப்பதால், அவைகளை வடிவமாற்றம் அடையாமற் பாதுகாக்க வேண்டும். பிறந்த குழந்தையை ஒரு பக்கமாகவே கிடத்தி வைத்தால் நெற்றியின் ஒரு புறம் புடைத்தும் மற் றொருபுறம் தட்டையாயும் வடிவுறுதல் கூடும். ஆத லால், சில மணி நேரங்களுக்கிடையில் அதன் கிடையை மாற்றவேண்டும். நிற்குந்திறம் உண்டாவதற்குமுன் குழந்தையை நிறுத்தி வைத்தால், அதன் கால்கள் வளைந்து போம். எலும்பு உரம் பெறுதற்குரிய சத்தான உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தல் வேண்டும்.

இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடத்திலுள்ள பொருத்துகள் பல வகையாய் இருக்கும். விரல் எலும்புகளின் பொருத்துகள் கதவுக்கீல்கள் போல இருப்பதால்,விரல்கள் கதவுபோல முன்னும் பின்னுமாக அசைதல் கூடும். தோளெலும்பின் பொருத்து ஒரு குழியில் ஒரு பந்தினை அமைத்தாற்போல இருக்கும். அது கையை வட்டமாகச் சுழற்றுவதற்குத் துணை புரிகின்றது. பொருத்துகளில்  எலும்புகள், பலமான கட்டுகளால் கட்டப்பட்டிருக்கின்றன. பொருத்துக்களை அளவுக்கு மிஞ்சி அதிகமாக அசைத்தால், கட்டுகள் கிழிவுபடும். அப்போது சுளுக்கு உண்டாகும். எலும்புகள் இலேசாக உடைந்தால் தக்கபடி சிகிச்சை செய்தவுடன் அவை வளர்ந்து பொருந்திக்கொள்ளும். மரத்தின் கிளைகளைப்போல அவைகள் வளர்ந்து பொருந்துவன.

எலும்புக்கு மேலாகத் தசைப் பகுதிகள் உள்ளன. உடம்பில் சுமார் ஐந்நூறு தசைப் பகுதிகளுக்குமேல் உள்ளன. அவை பல வகை வடிவும் அளவும் உள்ளவை. சில வட்டமாயும், சில நீளமாயும், சில குட்டையாயும், சில பெரியவாயும், சில சிறியவாயும் இருக்கும். முன் கையை மேற்கைக்கு நேரே வளைக்கும் போது மேற்கையிலுள்ள தசை நன்கு புலனாகும்.

வெற்றிலையைச் சுவைத்து மெல்லும் போது வாயின் கீழெலும்பை அசைக்கும் தசைகள் பொருத் துப் பக்கத்தில் தோன்றும். தசைகளின் தொழில், உடம்பின் பகுதிகளை அசைப்பதாகும். நாம் நடக்கும் போது தசைகள் தொழிற்படுவதைப் பார்க்கலாம். சும்மா நிற்கும் போதும் சில தசைகள் சுருங்கினாற் றான் உடம்பு நேராய் இருக்கும். உட்கார்ந்திருக்கும் போதுமுதுகுத் தசைகளைத் தளர விட்டால் முதுகு வளைந்து கூனல் உடையதாகும். ஆதலால், எப்போ தும் நேராகவே நிற்கவும் இருக்கவும் பழகுதல்வேண் டும். உடம்பின் உறுப்புகளை அவற்றின் அமைப்புக் கேற்ப அசைத்துப் பயிற்சி செய்தால், இரத்த ஓட் டமும், சீரண சத்தியும், நல்ல சுவாசமும் ஏற்படும். நல்ல உடம்பு மனத்தின் பயிற்சிக்குத் துணை செய் யும். உபயோகத்தினாலே உறுப்புகள் வளர்ச்சியும் உறுதியும் அடைகின்றன. கொல்லத்து வேலை, தச்சு வேலை செய்பவர்களின் கை பெரிதாயும் பலமாயும் இருக்கும். மலை வேலை ஆட்களின் கால்கள் பெரியன வாயுந் திறமாயும் இருப்பதற்குக் காரணம், அவர் கள் நடத்தற்கரிய கடினமான இடத்தில் மிகுதியாய் நடப்பதேயாகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல், தோட்ட வேலை செய்தல், தச்சு வேலை முதலியவற் றால் தசைகள் வளனும் திறனும் உடையனவாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *