வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

வாழ்க்கை இன்பம்

1. தோற்றுவாய்

ஒவ்வொருவருக்கும் தம் உடம்பைப் பாதுகாக்க வேண்டுமென்னும் கவலை முதுமையிலேதான் உறுதியாக ஏற்படுகிறது. ஒரு பொருளின் அருமை, அதனை இழந்த போதுதான் நன்கு உணரப்படும். அது போல, இளமையின் பெரும்பயன், இளமை கழிந்த பின்னர்த்தான் கூர்மையாகப் புலப்படும். இளமை யில் உடம்பைப் பாதுகாவாதவருட்சிலர், முதுமை யில் மிகக் கருத்தூன்றி அதனைப் போற்ற முயல்கின்றனர். எந்நாளுமே உடம்பைச் சுகமாக வைத் துக்கொள்ளும் முறையைக் கையாளுகின்றவர்களுக்கு அதன் நலனும் இன்பமும் மிகுந்த பயன் தரும்.

உடல் நலம் பெறாவிட்டால் நாம் சுயாதீனம் அற்றவர்களாவோம்; உணவு முதலிய ஒன்றையும் நாம் இனிது நுகர முடியாது ; நமக்கு வேண்டுபவை களை நாமே தேடிக்கொள்ளவும் இயலா து; நோயும் வசதிக் குறைவுகளும் உடம்பில் நிலைவரமாய் இருந்து கொண்டிருக்கும்; நம்மைச் சேர்ந்தவர்களுக்கு நாம் ஒரு சுமையாய் இருப்போம். சுகக் குறைவுள்ள உடம்பில் நோய் எளிதாகப் புகுந்து நிலை பெறுவ தோடு, பிறர்க்கும் அது எளிதாகப் பரவும். ஒரு நோயாளியினால் பல மனிதர்க்கு நோயும், பொருட் செலவும், துயரமும் ஏற்படுதல் கூடும்.

அனைவரும் சுகாதாரத்திற்குரிய விதிகளை மேற்கொண்டு நடந்தால், நோயும் மரணமும் மிகுதியாய்ப் பரவாமலிருக்கும். ஐரோப்பிய நாட்டில் சுகாதார முறை நன்கு கையாளப்படாத காலங்களில் மனிதர் களின் சராசரி வயது இருபதாய் இருந்தது. இப் போது சராசரி வயது நாற்பதுக்குமேல் இருக்கிறது. இதற்குக் காரணம், இக்காலத்தில் குடிகளும் அர சாங்கத்தாரும் சுகாதார முறையைக் கையாளுவதே யாகும். இந்தியாவில் இப்போதுகூடச் சராசரி வயது இருபத்தைந்துக்கு மேல் இல்லை. அஃது இந்தியாவின் சுகாதாரக் குறைவையே காட்டுகிறது. சுகாதார விதிகளைச் சாகப் போகிற நாளில் கைக் கொள்ளுதல் நன்றன்று. குழந்தைப் பருவம் முதற் கொண்டே பெற்றோர் அவற்றைத் தம் மக்களின் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

நோய்கள் உடம்பு நன்கு நிலைபெறுவதற்கு வேண்டும். பொருள்களின் குறைபாட்டாலும், புறத்தே இருந்து உடம்பினுட்புகும் நச்சுப் புழு முதலியவற்றாலும் ஏற்படுகின்றன. தவறான பழக்கத்தாலும் நோய் விளைதல் இயல்பு உடம்பினுட் புகும் நச்சுத் துகள்கள் தாவர சம்பந்தமாயும் இருத்தல் கூடும்; உயிர்ப் பிராணிகள் வடிவாயும் இருக்கும். அவற்றிற்பல, கடுகின் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுள்ளவையாய் இருக்கின்றன. அவை எளிதிற் கண்ணுக்குப் புலனாதலில்லை. அவை விரை வில் ஆயிரக் கணக்காகப் பெருகுகின்றன. வாந்தி பேதியை உண்டாக்கும் புழு ஒன்று பத்து மணி நேரத்தில் பத்து லட்சம் புழுக்கள் உண்டாவதற்குக் காரணமாகும். அவ்விதப் புழுக்கள் கிணறு, ஆறு, குளம் முதலியவற்றிலுள்ள நீர்களிலும், தெருப்புழுதியிலும், வீட்டுத் தரைகளிலும் சுவர் களிலும் உள்ள புழுதிகளிலும், உண்ணும் உணவு களிலும், பருகும் பானங்களிலும் கலந்திருக்கும். அவை நம் உடம்பிற்புகாதபடி காத்தலே நன்று. புகுந்தால், அவற்றை உடனே அழித்தொழிக்க வழி தேடுதல் வேண்டும். நம் உடம்பில் உயிர்ச் சத்தானது மிக்க வலியுடையதாயிருப்பின், நோய்ப் புழுக்களை அஃது எளிதில் அழித்துவிடும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *