வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

13. கால் முழுக்கு

மரத்தொட்டியில் கணைக்கால் நனையும் அளவு வெந்நீர் வார்த்து அதில் இரண்டு பாதங்களை யும் வைக்க வேண்டும். அதில் சூடு அதிகமாயுள்ள வெந்நீரைக் கால் பொறுக்கும் வரை கொஞ்சங் கொஞ்சமாக விடலாம். ஐந்து நிமிடம் முதல் இருபது நிமிடம் வரையிற்கால்களை வெந்நீரில் வைத் திருக்கலாம். குளிர்ந்த நீரில் நனைத்துப் பிழிந்த ஒரு துணியை வெந்நீரில் கால் வைப்பவருடைய நெற்றியில் போட்டு வைத்தால், அது கிறுகிறுப்பையும் தலை வலியையும் நீக்கும். இத்தகைய கால் முழுக்கு, சுரத்தின் தொடக்கத்தில் பயன்படும். அடி வயிற் றின் எரிவு, காலின் குளிர்ச்சி, தலைவலி முதலியவற்றை அது குணப்படுத்தும். நோயாளி பலவீனமாயிருந்தால், படுத்துக்கொண்டு காலை வெந்நீரில் வைக்கலாம். வியர்வை உண்டாவதற்குக் காலை வெந்நீரில் வைத்திருக்கும் போது போர்வையினால் உடம்பை மூடி வெந்நீர் குடிக்கலாம். தலையை எப் போதும் குளிர்ச்சியாகவே வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தொட்டியில் உட்கார்ந்து, மற்றொரு தொட்டியில் உள்ள வெந்நீரில் கால்களை வைப்பதும் உண்டு. அப்படிப் பதினைந்து நிமிடம் வரை வைத்திருக்கலாம். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அப்படி வைத்தால், இடுப்பு வலி, சூதகவலி முதலியவை நீங்கும். வெந்நீரால் கழுவிய உடற்பகுதிகளை ஈரத் துணியால் தேய்த்து உலர்ந்த துணி யால் துடைப்பது நல்லது.

கையிலாவது காலிலாவது புண் இருந்தால், ஒரு வாளியில் குளிர்ந்த நீரும், மற்றொரு வாளியில் வெந்நீரும் வைத்து, முதலில் வெந்நீரில் சிரங்குள்ள உறுப்பை ஒரு நிமிடம் வைத்திருந்து, பின்னர்க் குளிர்ந்த நீர்த்தொட்டியில் அவ்வாறே வைக்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி அரை மணி நேரம் வைத்திருந்தால், நோய் குணமாகும். ஒரு நாளைக்கு மூன்று முறை இப்படிச் செய்யலாம். காயங்கள் அல்லது சுளுக்குகளைக் குணப்படுத்துவதற்கும் இவ்வாறே செய்யலாம்.

வயிற்றிலுள்ள மலச் சிக்கலை நீக்குவதற்கு ‘எனிமா’ என்னும் குடற்கழுவும் கருவியை உபயோகப்படுத்தலாம். எனிமாவுக்காகப் பயன்படுத்தும் நீர் வெந்நீராயிருத்தல் நல்லது. நிலையான மலச் சிக்கலை நீக்குவதற்குச் சில நாள் வரை தொடர்ந்து எனிமா உபயோகிக்க வேண்டும். சூட்டில் எழுபது டிகிரி முதல் எண்பது டிகிரிவரையில் வெப்பமுள்ள குளிர்ந்த நீரையே உபயோகப்படுத்தலாம். வயிற் றோட்டமிருந்தால், நல்ல சூடுள்ள நீரையே உபயோ கிக்க வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *