வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

12. நோய் நீக்கும் இயற்கை முறை

நோய் நீக்கத்திற்கு மருந்துகளை மிகுதியாக உட்கொள்வதைப் பார்க்கிலும் நோயின் முதற்கார ணத்தை அறிந்து அதனை இயற்கை நற்பழக்கங்களால் அகற்றுவதே சிறந்ததாகும். சுகாதாரமான இயற்கைப் பொருள்களுள், கதிரவனொளி மிகவும் அவசியமானது. அது மனிதனுக்கு மாத்திரமல்லாமல், மற்றப் பிராணிகளுக்கும் செடி கொடிகளுக்கும் இன்றியமையாதது. சூரிய வெளிச்சம் படாத செடி, வெளிறிப் போய், நோயடைகின்றது. கதிரவனொளியானது மிக விரைவாய் நோய்ப் புழுக்களைக் கொல்கின்றது. சூரிய வெளிச்சம் படுகின்ற உடம்பின் பாகத்தில் தோலைப்பற்றிய நோய் உண்டாவது அரிது. இருமல் நோய் நீக்குவதற்கும் சூரிய வெளிச்சம் இன்றியமையாததே. அது, உலகத்திலுள்ள சூடு, ஒளி, ஆற்றல் என்பவற்றிற்கு மூலமாகின்றது. அது உயிர் கொடுக்குந் தன்மையதென்று அதை வைத் தியர்கள் கொண்டாடுகின்றார்கள். சூரிய ஒளி படாத வீடுகளில் வாழ்கின் றவர்களுக்கு நோய் எளிதில் உண்டாகும். குடியிருக்கும் வீட்டிலுள்ள அறைகளில் உள்ள கதவு, பலகணி (சன்னல்) முத லியவற்றிற்குத் திரை போடுவது சூரியன் ஒளி வர வைத் தடுப்பதாகும். மக்கள் நெருங்கி வாழும் நகரங்களிலும் நீராவி, கரி முதலியவற்றால் யந்திரங் கள் இயங்கும் இடங்களிலும் வாழ்கின்ற மக்களுக் குப் போதுமான சூரிய வெளிச்சமும் நல்ல காற்றும் கிடைக்க மாட்டா. வேலை நிலையங்கள் நன்றாகக் காற்றும் ஒளியும் உலாவுவதற்குரிய சன்னல்களை உடையனவாயிருத்தல் வேண்டும். நாட்டுப்புறங் களில் வாழ்கின்றவர்கள், தொழிற்சாலையின் கரிப் புகைகளைச் சுவாசிப்பதில்லை. அழுக்கான காற்று, தொத்து வியாதி என்பவைகளின் கெடுதி நாட்டுப் புறத்தில் இல்லை. நரம்புகளைத் தாக்கும் ஓசைகள் நாட்டுப்புறத்தில் மிகக் குறைவாய் இருக்கும். வழி நடப்பதில் கண்களுக்கு நாட்டுப்புறங்களில் அதிக வேலையில்லை. பசுமையான புல் வெளிகளையே கண் கள் பார்க்கும். தூய நீர் நிலைகள் கிராமங்களில் மிகுதியாய் உண்டு. ஆதலால், முதியவர்கள் நாட்டுப் புறங்களில் வாழ்வதால் தங்கள் ஆயுளை நீடிக்கச் செய்துகொள்ளுகிறார்கள்.

கதிரவனொளிக்கும் நல்ல காற்றிற்கும் அடுத்த படி, நல்ல நீர் எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் இன்றியமையாததாகும். நம் உடம்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரே. இரத்தத்திலுள்ள நீர் குறைந் தால், நமது பலமும் குறையும். நீரை மிகுதியாகக் குடிப்பதால் வியர்வை வழியாகவும் சிறு நீர் வழி யாகவும் உடம்பின் நச்சுப் பொருள்கள் வெளிவரும். உட்சுத்தம் நீர் குடிப்பதாலும் புறச்சுத்தம் நீரில் முழுகுவதாலும் ஏற்படுகின்றன. நோய் நீக்கத் திற்கும் நீர் உபயோகப்படுகிறது.

நீரை நன்கு காய்ச்சிக் குளிர வைத்துக் குடி’ப் குடி நீர் பனிக்கட்டி போலக் குளிர்ந்திருக்கக் கூடாது. சுர நோயால் வருந்துகின்றவர் கள் குளிர்ந்த நீரைக் குடிக்கலாம். அசீரணத்தால் வயிற்றில் நோவுள்ளவர்கள் வெந்நீர் குடிப்பது நல்லது.

 குழந்தை தண்ணீர்க்காக அடிக்கடி அழும். அது தெரிந்து அதற்குக் குடிநீர் கொடுக்கவேண்டும். இரத்த ஓட்டம் உடம்பில் நோயுள்ள பகுதியில் அதிகமாவதற்கு வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி நோயுள்ள பாகத்தில் ஒற்றடம் கொடுக்கலாம். ஒற்றடம் கொடுப்பது நோய்க்குத் தக்கபடி பதினைந்து நிமிடம் முதல் அறுபது நிமிடம் வரை செய்யலாம். மூன்று அல்லது ஐந்து நிமிடத் திற்கொரு முறை இடைவிட்டு ஒற்றடம் கொடுப்பது நல்லது.

இடையிடையே குளிர் நீர் ஒற்றடம் சில விநாடிகள் வரையிற்கொடுக்கலாம். பல வகையான நோவுகளை ஒற்றடம் நீக்கிவிடும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *