வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

19. பிள்ளைப் பேறு

உணவும் நீரும் பசி தாகங்களை நீக்குவதற்கு அவசியமானாலும், அளவுக்கு மிஞ்சினாற் கேடு பயப் பதுபோல, காதல் வாழ்க்கையும் மனித இயற்கைக்கு அவசியமானாலும், சேர்க்கை அளவுக்கு மிஞ்சினாற் கேடு பயக்கும் என்றறிக. பூப்பு மாதந்தோறும் ஏற்படுவதில், ஒரு பழுத்த வித்து, கருப்பைக்குட் செல்லுகிறது. அது கருத்தரிப்பதற்குத் தகுதியாயிருக்கும். பூப்பு முடிந்து பத்து நாள் வரை சேர்க் கையினால் கருத்தரித்தல் ஏற்படும். பூப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னும் கருத்தரித்தல் கூடும். ஒழிந்த, ஒரு வாரம் கருத்தரித்தல் அபூர்வமாயிருக்கும். அக் காலத்தில் மாத்திரம் சேர்க்கை இருக்குமானால், பிள்ளைப்பேறு அடிக்கடி நிகழாது. கருத்தரித்த வுடன் கடுகிலும் மிகச் சிறியதாயுள்ள வித்து, சில நாட்களில் புளியங்கொட்டையளவு பெரிதாய், நான்கு வாரங்களில் புறா முட்டை அளவாகிறது. இரண்டாவது மாதத்தில் அதுகோழி முட்டையளவு பெரிதாகிறது. அதற்கும் கருப்பையின் உட்பகு திக்குமிடையில் இரத்தக் குழாய்கள் அமைகின்றன.

தாயின் உணவின் பகுதி செரிமானமானவுடன் இரத்தக் குழாய் வழியாகக் கருவினுட்சென்று குழந்தையை வளர்க்கின்றது. நான்கு மாதத்திற் கரு ஐந்து அங்குல நீளமாகிறது. ஐந்தாவது மாதத்தில், அது சுமார் இரண்டரைப் பவுண்டு எடையுள்ளது. ஆறு மாதத்திற் குழந்தை பிறந்தால், சில நாள்தான் உயிரோடிருக்கும். ஒன்பதாவது மாதம் பிறந்தால் தக்க பாதுகாப்பால் அது வாழலாம். இருநூற் றெண்பது நாளிற்பிறந்தால், அது கருப்பையில் முழு வளர்ச்சியடைந்து வெளிப்படுகிறது. ஆறு முதல் பத்துப் பவுண்டு வரை அதன் பளுவிருக்கும். இரு பது அங்குலம் அது நீண்டிருக்கும். கருத்தரிப்பு ஏற் பட்ட பின் மாதவிடாய் நிற்றல், சில வாரங் கழித்து வாந்தியுணர்ச்சி தோன்றுதல், மூன்றாவது மாதத் தில் அடி வயிறு கனத்தல், நான்காவது மாதத்தில் குழந்தையின் இயக்கம் தாய்க்குப் புலனாதல் என்பன வழக்கமாய் நிகழ்வன.

கரு வளர் காலத்தில் தாய்க்கு வளந்தரும் உண வும், அளவுடைய உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலை யும் அவசியம் தேவை. மலச்சிக்கலை அவ்வப்போ ஒழித்தல் வேண்டும். இவையில்லாவிடில் தசைத் தளர்வும், குழந்தையின் பலவீனமும், வருத்தமான பிரசவமும் ஏற்படும். பிள்ளைப் பேற்றுக் காலத்தில் உடம்பைப் பாதுகாவாமை, பெண்டிர் விரைவில் முதுமையடைதற்கேதுவாம். பிரசவ காலத்தில் சேர்க்கை மிகுதியாகக் கூடாது. தூய இடம், தூய வுணவு, தூயவுடை, தூய காற்று என்பன கருவுற்ற பெண்டிர்க்கு அவசியமானவை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *