வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

2. உடலமைப்பு

ஒவ்வொருவரும் தத்தம் உடம்பின் அமைப்பைப்பற்றிப் பொது முறையிலாவது தெரிந்திருத் தல் வேண்டும். வைத்தியர்கள் அதைப்பற்றிச் சிறப்பாய் அறியக் கடமைப்பட்டுள்ளார்கள். உணவுகளைச் செரித்து ஒழுங்குபடுத்தற்குரிய கருவிகள் வயிற்றிலே பெரும்பான்மை அமைந்திருப்பினும். அவற்றோடு தொடர்புடைய பகுதிகள், கழுத்திற்குக் கீழும் காலுக்கு மேலுமுள்ள உடம்பின் நடுப்பாகத்தில் அமைந்துள்ளன. சுவாசப்பை, நெஞ்சத்தின் குருதிப்பை முதலியன மேற்பாகத்திலும், இரைப்பை, ஈரல் முதலியன கீழ்ப் பாகத்திலும் அமைந்துள்ளன. இரண்டிற்கும் நடுவே குறுக்கு மதில் போன்ற தசைச் சுவர் ஒன்றுண்டு. அச்சுவர்க்கு மேலுள்ள மார்பு என்னுமிடத்தில் மேற்பகுதியில் சுவாசப்பை இரண்டுள்ளன. இடச் சுவாசப்பைக்குக் கீழ் அக மலர் என்னும் இருதயம் தலை கீழாய்த் தொங்குந் தாமரைப் பொகுட்டுப் போன்று அமைந்துள்ளது. சுவாசப்பையோடு காற்றுக்குழல், குரல் வளை என்பன ஒரு தொடர்பாய் வாயோடும் மூக்கோடும் சம்பந்தமுடையவை. கழுத்தில் உள்ள குரல் வளைக்குப் பின் உள்ள இரைக்குழல், வாயினையும் வயிற்றில் உள்ள இரைப்பையினையும் ஒன்று சேர்க்கிறது. குறுக்குத் தசைக்குக்கீழ், வயிற்றின் மேற்பகுதியில் இரைப்பை இருக்கிறது. இரைப்பைக்கு அடியில் கல் லீரல் வலப்புறத்திலும், மண்ணீரல் இடப்புறத்திலும் உள்ளன. அவற்றிற்கு இடையே பித்த நீர்ப்பை உள்ளது. இவற்றிலிருந்து உணவைச் செரிக்கும் இரசங்கள் இரைப்பையினுட்செல்கின்றன. இரைப்பை சிறுகுடலோடு சம்பந்தமுடையது. சிறுகுடல் வளைந்து வளைந்து கீழ் வயிற்றில் அமைந் திருப்பது. அது நீளத்தில் சுமார் இருபது அடி அளவு உள்ளது. அது கழிக்கவேண்டியவற்றைக் கழித்துப் பெருங்குடலிற்செலுத்தும். பெருங்குடல் குதத்தோடு சம்பந்தமுடையது. கழிவு நீர்களைப் பிரிக்கும் நீர்க்குண்டிக்காய்கள் இரண்டும் இரைப்பைக்கும். பின்னேயுள்ள வயிற்றுச்சுவரில் இருக்கின்றன. அவை வயிற்றின் கீழ் முகப்பில் உள்ள சிறுநீர்ப் பையுடன் தொடர்புடையன. கழிவுநீர் வியர்வை வடிவாய்த் தோலிலுள்ள சிறு துவாரங்கள் வழியாக வெளியே செல்வதுண்டு. மூளை, முதுகந்தண்டு என் பவற்றில் உடம்பின் கருவிகளைச் செலுத்தவும் நிறுத்தவும் வல்ல நரம்புகள் தொடங்கி, அக்கருவிகளைச் சார்ந்துள்ள தசைப் பகுதிக்குச் செல்கின்றன. தசை கள் தம் அசைவால் கருவிகளை அசைப்பன. உடம் பின் எப்பகுதிக்கும் ஆதாரமாய் எலும்புச் சட்டம் ஏற்பட்டுள்ளது. செரித்த உணவின் சாரம் இரத்தத்திற்கலந்து, உடம்பெங்கும் பரவுகின்றது. இரத்தக் குழாய்களின் ஆட்சி நெஞ்சப்பையென்னும் இரு தயத்திற்குரியது. இருதயம் சுருங்கி விரிந்து துடிப் பதனாலேயே இரத்த ஓட்டம் உடம்பில் முறைப்படி நிகழ்கின்றது.உடம்பிற்கு ஆதாரமானது உணவாத லின், அது செரித்து உடம்பிற்சேர்கிற முறையை அறிதல் அவசியமாகும். உணவை வாயில் இட்ட தும் பற்கள் அதனைச் சவைத்து மிக நுண்ணிய பகுதிகளாக்கிவிடுகின்றன. பற்கள் சுத்தமாய் இல்லாவிட்டால், அவற்றிலுள்ள அழுக்குகள் உண வோடு கலந்து வயிற்றுள் சென்று, கெடுதல் விளைக்கும். இனிப் பற்களைப்பற்றி ஒரு சிறிது ஆராய் வோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *