வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

10. உணவு கொள்ளுதல்

உடம்பை நோயற்ற நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கு இன்றியமையாதது, தக்க உணவை உரிய நேரத்தில் வேண்டிய அளவில் உட் கொள்ளுவதே ஆகும். சிலர்க்குப் பிறவியிலேயே நல்லுடம்பு அமைந்திருப்பதால், தகாத உணவினால் உண்டாகுங் கேடு அவர்களை அதிகமாகப் பாதிப்ப தில்லை. சிலர் வாழைப்பழம் முதலிய பழங்களையும் வாதுமைப் பருப்புப் போன்ற பருப்புகளையும் தின்றாலும், மிகக் குறைவாக உணவு உட்கொண் டாலும், நல்ல உடல் நிலையைப் பெறாமல் வருந்துவதும் உண்டு. ஒருவனுக்கு உவப்பாயிருக்கும் உணவு, மற்றொருவனுக்கு வெறுப்பை விளைத்தல் கூடும். அளவாக உண்ண வேண்டுமென்றால், ஒருவர் கொள்ளும் உணவுக்கு மற்றவர் கொள்ளும் உணவின் அளவு வேறுபடும். உடம்பின் அமைப் புக்குத் தக்கபடி சுவைகளும், செரிக்கும் ஆற்றலுக் குத் தக்கபடி உணவும் வேறுபடும். உண்டது நன் றாகச் செரித்த பின் அளவாக மறுபடியும் உணவு கொள்ளுதல் உடம்பு நெடுங்காலம் நிலைப்பதற்குக் காரணமாகும். ஆகையால், திருவள்ளுவர்,

அற்றால் அளவறிந் துண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு’

என்று கூறினார்.

எல்லாராலும் ஒரே மாதிரி உண்ணவோ, உடற் பயிற்சி செய்யவோ முடியாது. இளமையில் உடல் வளர்ச்சிக்குப் போதுமான உணவை உட்கொள்ளுதல் வேண்டும். முதுமைப் பருவத்தில் உடல் வளர்ச்சி ஏற்படாதாகலின், குறைந்த உணவை உட்கொள்ளுதலே நல்லது. சத்தான உணவைக் கொள்ளுதல் நல்லதாயினும், முதுமையில் சத்து மிகுந்த உண வைச் செரித்தல் கடினமாகும். உடம்பின் உழைப்பினால் வேலை செய்கின்றவர்கள் உண்டு செரித்துக் கொள்ளக்கூடிய உணவை ஓரிடத்திலேயே இருந்து மூளை வேலை செய்கிறவர்கள் செரிப்பித்துக்கொள்ள முடியாது. முதுமையுற்ற காலத்தில் செரி கருவி களுக்கு அளவுக்கு மிஞ்சிய வேலை கொடுப்பது தவறு. உடலுழைப்புச் செய்பவர்களுக்குக் கரி நீர்ச்சத்து (Carbohydrate) மிக்குள்ள அரிசி, உருளைக்கிழங்கு, தானிய மா, சர்க்கரை முதலியவற் றைச் செரித்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு. ஓரிடத்திலேயே இருந்து வேலை பார்க்கும் எண்பது ஆண்டுக்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு வெண் கருச்சத்துடைய எளிய உணவுப் பொருள்கள் ஏற்றனவாகும். கொழுப்புண்டாக்கக் கூடிய நெய், பால், கொட்டைகள் முதலிய உணவுப் பொருள்கள் அளவாகவே சேர்க்கப்பட வேண்டும். ஒரு நாளைக் குச் சுமார் மூன்று அவுன்ஸ் கொழுப்புக்கு மேல் சேர்வது உடம்பிற்கு நல்லதன்று. தவிடு முற்றிலுங் களையப்படாத கோதுமை ரொட்டி, பருப்புகள், பயறுகள், கொட்டைகள் முதலியவற்றில் வெண் கருச் சத்து உள்ளது. வெண்கருச்சத்தில் கரி, பிராணவாயு, நீர் வாயு, வெடி உப்பு வாயு, கந்தகம் என்பன உள்ளன. அவை உடலுக்கு உறுதி செய்வன. ஒவ்வொருவரும் தத்தம் செரிமான ஆற்றலை அறிந்து, அதற்கு ஏற்ற அளவு வெண்சத்துக் கலந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு எலும்பும் பல்லும் உண்டாவதற்குக் காரணமாகச் சுண்ண உப்புகள் தேவையாகும். முதியவர்களுக்கு இரும்பு சம்பந்தமான உப் புகள் தேவை. நாவின் சுவையையே முக்கியமாகக் கருதி உணவுகளை மிகுதியாக உட்கொள்ளுதல் தவறு. சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி செரிக்கும் ஆற்றலும் மிகுதல் கூடும். ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவன் வெளியே போய் உலாவித் திரிந்து வேலை செய்ய நேர்ந்தால், அப்போது வழக்கத்திற்கு அதிக மான உணவை அவன் செரிப்பித்தல் கூடும். வேலை குறைந்த நேரத்தில் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்பதைப் பலர் கவனிப்பதில்லை. நாகரிகமற்ற பணக்காரர் பலர், தமக்குச் செரிக்கக்கூடிய உணவின் அளவுக்கு இருமடங்கு, மும்மடங்கு அதிக மான சுவையுள்ள உணவுகளையுண்டு. அதனால் வருங்கெடுதியை அனுபவிக்கின்றனர். சிலர் வேலை அவசரத்தினால் உண்ணும் உணவை நன்றாகச் சவைத்து மெதுவாக உண்ணாமையின், முதுமையில் உணவு வெறுப்பால் வருந்துகின்றனர்.

சுத்தமான புதிய பழங்களையும் பச்சைக் கீரை வகைகளையும் பிற உணவோடு சேர்த்து உண்பது நல்லது.

ஆரஞ்சுப்பழ ரசம் இளைஞர்க்கும் முதியவர்க்கும் நன்மை தரத் தக்கது. பச்சைக் கீரைகளை நீரை வடித்துவிடாமல் நீராவியில் வேகவைத்து உண் ணின், அவற்றின் உயிர்ச்சத்துக் கெடுவதில்லை. சோடா உப்புச் சேர்ந்தால் உயிர்ச் சத்து ஒழிந்துவிடும்.

சிறிது காலத்துக்குமுன்னே உணவுப் பொருள் களில் சில வகை உயிர்ச்சத்துக்கள் இருப்பதால் அவற்றை அழித்துவிடாமல் சமையல் செய்தல் அவசியமென்பதை மேலை நாட்டு அறிவு நூலார் கண்டனர். வெண்ணெய், பால், பச்சைக் காய்கறிகள், முட்டை, சில பிராணிகளின் ஈரல்கள், தவிடு போக்காத தானியம் முதலியவற்றிலுள்ள முதலுயிர்ச்சத்து (Vitamin A) முதியவர்களுக்கு அவசியமாகும். சில வகைப் பருப்புகள், பழங்கள். வெங்காயம் முதலியவற்றில் இரண் டாவது வகை உயிர்ச்சத்து (Vitamin B) இருக்கின்றதாம். ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், கொடி முந்திரிப் பழம், தக்காளிப்பழம் முதலியவற்றில் மூன்றாவது வகை உயிர்ச்சத்து (Vitamin C) உண்டென்பர். உயிர்ச் சத்துள்ள உணவுகள், நோய்ப் புழுக்களைத் தாக்கி ஒழிப்பதிற் சிறந்தனவாம். சில வகை உயிர்ச் சத்துகள் இல்லாமையால், மலட்டுத் தன்மை ஏற் படுகின்றதென்பர். உயிர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகமாக வேகவைப்பதால், அவற்றின் உயிர்ச் சத் துக் கழிந்து போகின்றது. சீமை இலந்தம்பழம் (ஆப் பிள்). உருளைக்கிழங்கு என்பவற்றின் மேல் தோலில் உயிர்ச்சத்து இருப்பதால், அவற்றை நீக் குதல் கூடாது. தகரத்தில் அடைத்து வரும் பழங் களில் உயிர்ச்சத்துக் குறைந்து போகின்றது.

நாம் கடையில் வாங்கும் பழங்களை உண்பதற்கு முன் வெந்நீரால் கழுவுதல் நல்லது, பாலைக் காய்ச்சின பிற்பாடு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் வைத்திருந்தால், அதில் நோய்ப் புழுக்கள் உண்டாகும். புலாலுணவு நோய்க்குக் காரணமாதலால், அதனை ஒழித்தலே நல்லது. சில பருப்புகளில் மாமிச உணவிலிருப்பதைவிட அதிகமான உயிர்ச் சத்து இருக்கின்றது.

உணவு சமைக்கும் சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் சுகாதாரத்திற்கு இன்றியமையா ததாகும். சூரிய வெளிச்சமுங் காற் றும் சமையலறைகளில் உலாவுதல் வேண்டும். ஈ, கொசு முதலிய பூச்சிகள் அணுகாதபடி வலைப்பெட்டி களிலும் மூடிய பாத்திரங்களிலும் உணவுப்பொருள் களைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி, காய்கறி முதலியவற்றைத் தூய நீரிற் கழுவுதல் வேண்டும். பாத்திரங்களை வெந்நீரால் கழுவிச் சுத்தமான துணியினால் துடைத்தல் வேண்டும். பதனழிந்து ஊசிய உணவை உடனே அகற்றுதல் வேண்டும். உணவுப் பொருள்களை எண்ணெயிலிட்டு வறுப்பதைவிட, நீரில் வேக வைப்பது சிறந்தது. குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் ஒரு நாளில் உணவு கொள்ளுதல் கூடாது. இர வில் அகாலத்தில் உணவு கொள்ளுதல் செரிமானத் திற்கு ஊறு விளைக்கும். குறிப்பிட்ட நேரங்களுக்கு இடையில் உணவு கொள்ளுதல் கூடாது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *