
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
8. நரம்பின் அமைப்பு
மூளையிலும் முதுகந்தண்டிலும் நரம்புகளுக்குரிய சிறு கூடுகள் இருக்கின்றன. அவைகளிலிருந்து நரம்புகள் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ் வொரு கருவிக்கும் பலவாறாகப் பிரிந்து செல்கின்றன. அவற்றின் வழியாக ஒவ்வொரு கருவியும் உரிய நேரத்தில் உரிய தொழிலை உரிய முறையில் செய்வதற்குரிய இயக்கம் ஏற்படுகின்றது. சுவாசப் பை, இருதயம், ஈரல் முதலியவற்றை இயக்குவது நரம்புத் தொகுதியே. மூளையில் இருக்கும் நரம்பு களின் மூலமானது ஆலோசிப்பதற்கும் நினைவில் வைத்துக்கொள்வதற்கும் துணை புரிகின்றது. மனத்தின் செயல் மூளையின் வாயிலாகப் புலனாகின்றது. உடம்பின் எப்பகுதியிலிருந்தும் மூளைக்குச் செய்தி யைக் கொண்டு செல்வனவும் நரம்புகளே. மூளையும் முதுகந்தண்டும் தந்தி நிலையம் போலவும், நரம்புகள் தந்தி போலவும் அமைந்துள்ளன. மூளையின் பின் புறத்திலிருந்து ஒரு சுண்டு விரல் அளவுள்ள கயிறு போலத் தலையோட்டிலுள்ள ஒரு துவாரம் வழியாகச் சென்று முதுகெலும்புக் கூட்டுக்குள் செல்வது முது கந்தண்டு எனப்படும். நரம்புகள் பல கிளைகளாய்ப் பிரிந்து உடம்பெங்கும் பரவும்போது சில நரம்புகள் மிக நுண்ணிய பட்டு நூல் இழையினும் நுட்பமாய் இருக்கும். கண்ணானது நமக்கு அருகில் ஒரு பாம் பைப் பார்த்ததும் கண்ணுக்கும் மூளைக்கும் சம்பந்தப் பட்ட நரம்பு, அச்செய்தியை மூளைக்குக் கொண்டு போகும். உடனே மூளையானது கை கால்களில் உள்ள தசைகளுக்குப் பிறிதொரு நரம்புத் தொகுதி வழியாகப் பாம்பிற்குத் தூரமாக அசைந்து விலகும் படி செய்தி அனுப்பும்.
அவ்வாறே ஒவ்வொரு தொழிலும் நடைபெறும் என்பதை அறிக.
மனத் திற்கும் மூளைக்கும் சம்பந்தமிருப்பதால், மனத்திலுண்டாகும் முயற்சிகள் மூளையிலிருந்து செல்லும் நரம்பு வழியாக உடம்பில் மாற்றங்களை உண்டுபண் ணும். ஒருவருக்கு வெட்கம் அல்லது கோபம் ஏற் பட்டால், முகத்தின் தோலிலுள்ள நரம்புகள் அங்கேயுள்ள இரத்தக் குழாயை அகலப்படுத்தி, அதில் இரத்தம் அதிகமாய்ப் பாயும்படி செய்து, முகத்தைச் சிவக்கச் செய்கின்றன. ஒருவனுக்குப் பயம் அதிகப்பட்டால், வியர்வைக் கோளங்களில் உள்ள நரம்புகள் புழுக்கமில்லாதபோதும் உடம்பில் வேர்வையை உண்டாக்கும்.[உடம்பு செம்மையாய் இருக்க வேண்டுமானால், மனம் செம்மையாய் இருக்க வேண்டும். தீய எண்ணங்களால் மனம் நோயடைவதால் உடம்பும் நோய் வாய்ப்படும்.



