

அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பதிப்புரை
தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் களில் தலைசிறந்த பெருமகனார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட தகைமையாளர்.
சமய நெறி நின்று செந்தமிழ்த் தொண் டாற்றும் பெரியார்.
ஆற்றொழுக்கான நடையில் இலக்கியக் கட்டுரைகளைப் புனைவதில் வல்லவர்.
சொல்லாற்றல், எழுத்தாற்றல், பண்பாற் றல் உடையவர் என இவரைப்பற்றி இன்னும் பற்பலவாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.
பகுத்தறிநிலையிலும் பாசம் உண்டு ! பக்தியிலும் பலமடங்கு அன்பு உண்டு !
எதிலும் தனக்கென ஒரு பெருமையை வைத்து இருப்பவர் தவத்திரு அடிகளார் அவர்கள்.
அவர்கள் தரும் இந்த நூல் ‘அப்பர் விருந்து.’
விருந்தின் சுவையினைப்பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் இதனைப் போற்றும்.
இருபத்து ஐந்தாண்டுகளாகச் செந்தமிழ்த் தொண்டும், அறப்பணிகளும் ஆற்றிவரும் தருமபுர ஆதீன மகா சந்நிதானம் அவர்களுக்கு இந்நூலை அடிகளார் காணிக்கை யாக்குகிறார்கள்.
அடிகளார் வழங்கும் சுவைமிக்க இந் நூலைப் பெரியவருக்குக் காணிக்கையாக அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.
பதிப்பகத்தார்.



