இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

15. சீதை இரங்கல்


“சானகி, நீ அயோத்தியிற்றானேயிரு, என்னோடு காட் டுக்கு வருமெண்ணத்தை விட்டுவிடு’ என என் கணவனார் எனக்குச் சொன்ன சொல்லை மீறிவந்த பாவத்தின் பலனன்றோ இது? நான் இங்கு வந்ததனால் என் நாயகருக்கு என்ன சுகம்? அன்று விராதன் என்னைத் தூக்கிக்கொண்டுபோக என் கணவனாருக்கும் இளவலுக்கும் மனவேதனை விளைத்தேன் ; என்னால் விராதனும் மடிந்தான். வேறொருநாள் சூர்ப்பணகை என்னை எடுத்துச்செல்ல இருவருக்கும் மனக்கிலேசம் விளைத்தேன். என்னாற் கரதூஷணரும் மாண்டார். உத்தமனாகிய இளையவனைப் பற்றிப் பொல்லாப்பு நினைத்தேன். நினைத்தது மட்டுமோ, பித்துப்பிடித்து வாய்க்குவந்தபடி ஏசினேன். அதனாலன்றோ அவன் என்னைக் காப்பதைவிட்டு வெளியே ஓடினன்? தன்வினை தன்னைச்சுடும் என்பது பொய்யோ? ஒருநாழிகைக் குள் என் ஆகாமியம் என்னைப்பிடித்தது. கடவுளே, என் புத்தியீனத்தை எனக்கு மன்னியும்; இந்தப் பாதகன் கையி லிருந்து என்னைத் தப்புவியும். ஐயோ! என் கொழுநர் எங் குற்றாரோ? அவருக்கு என்ன நேர்ந்ததோ? இலக்குமணன் எங்கு போயினனோ? இருவரும் திரும்பிவந்து என்னைக் காணாமல் யாது நினைப்பரோ? பாதகன் இராவணன் என்னைப் பிடித்து இழுத்துத் தேர்மேலேற்றிச் செல்வதை யாரும் பார்த் திலரே ! இதை அவருக்குச் சொல்லுவார் யார்? “உள்ளம் அறிவாய், உழைப்பறிவாய், நான் எழை; தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன், பராபாமே.” எனச் சீதை, பரமனைத் தியானிக்கையில், “ஏட, ஏட, நிறுத்து தேரை ; தேரை நிறுத்து; சீதையை எடுத்துச் செல்கிற நீ யார்? இறக்கு அவரைக் கீழே” எனப் பிடித்து இடித்தது போலக் கழறிக்கொண்டு குதிரைகளுக்கும் முன் நின்றான் ஒரு வீரன். அவன் கையிற் கதையிருந்தது. இடையில் வாள் தொங்கினது. அவனைக்கண்ட இராவணன் “விடு சீதையை, அன்றேல் என் கையாற் செத்தாய் ” என்றான். இவ்வாறு எதிர்பாராதவண்ணம் வந்து தடுத்தவன் சடாயு. அவன் இராம இலக்குமணரையுஞ் சீதையையுங்கண்டு நட்புக்கொண்ட வரலாறு முன்னமே கண்டுளேம். சடாயுவைக் கண்டவுடனே சீதை, ” ஐயா, உம்மை இக்கணம் இங்கு கொண்டுவந்தவர் கடவுளே. என் கணவனாரும் தம்பியும் இல்லாதநோத் திலே இந்தப் பாதகன் என்னை வலாற்காரஞ்செய்து இழுத்துக் கொண்டு போகிறான்; நீரே என்னை இரட்சிக்க வேண்டும் ” என்று கதறினாள். ” அஞ்சாதே, சானகி ” என்று அவளுக்குத் தைரியம் கூறியபின், இராவணனைப்பார்த்து, ” நீ பெருஞ் சூரன், ஆண்பிள்ளைகள் வீட்டிலில்லாத நேரத்திலே பெண் ணைத் திருடிக்கொண்டுபோகிற பராக்கிரமசாலி நீ; நான் முதியோனாயினும் என் கை இரண்டும் இருக்கையில் நீ இவரைக் கொண்டுபோவதில்லை , நீ ஆண்பிள்ளையானால் இறங்கு தேரை விட்டு, எடு உன் வாளை, போர்செய்வோம், வா” என்று சொல்லிக்கதையை நிலத்தில் எறிந்துவிட்டு வாளை உறையி னின்றும் உருவினான் சடாயு. இராவணனும் வாளை எடுத்துக் கொண்டு தேரினின்றுங் குதித்துச் சடாயுவோடு போர்செய்யத் தொடங்கினான். இருவருக்கும் சிறிதுநோம் வாட்போர் நடந்தது. முதியோனாகிய சடாயு இராவணனை எதிர்த்துப் போர்செய்யத் தேகபலமில்லையாயினும் மனோவீரங் குறைந்தவ னல்லன். தன்னாலான மட்டும் சீதையைக்காக்க முயன்றான். ஆயினும் ஈற்றில் இலங்கை வேந்தன் சடாயுவின் இரண்டு தோளையும் வெட்ட வே சடாயு தரையில் விழுந்தான். இராவணன் சீதையோடு தேரிலேறி இலங்கையை நோக்கிச் சென்றான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *