இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

27. இராம பட்டாபிஷேகம்


திரும்பிவந்த மூவரையும் தாயர் தழுவினர் ; வசிஷ்டர் ஆசீர்வதித்தனர். பாதசத்துருக்கினர் இராமனையும் சீதையையும் நமஸ்கரித்தனர். இலக்குமணன் பாதனை நமஸ்கரித்து, சத்துருக்கினனை ஆலிங்கனஞ் செய்தான். அங்கு நின்றவரெல்லாரையும் வசிஷ்டர் விளித்துப் பின் வருமாறு கூறுவார் : ” கோசலநாட்டினர்காள்! நாளைக்காலை ஏழரை நாழிகைக்கு மேல் ஸ்ரீராமசந்திரபூபதிக்கும் சீதாபிராட்டி யாரும் பட்டாபிஷேகமும் கிரீடதாரணமும் நடக்கும். தசரதசக்கரவாத்தியார் ஆணையைச் சிரமேற்கொண்டு பதி னாங்குவருஷம் வற்கலை தரித்துச் சடைகள் தாங்கிக் கந்தமூல பலாதிகளை யுண்டு தவஞ்செய்து திரும்பினார் இராமர். தந்தை யார் தமக்களித்த இராச்சியத்தைப் பாகபூபதி தமையனாருக்கு அருப்பணஞ்செய்யத் தமையனாரும் சிந்தை மகிழ்ந்து அதனை அங்கிகரித்துளார். இப்பதினான்குவருஷமும் நமக்கு யாதொரு குறையும் நேரிடாதபடி பரதர் நம்மை யாண்டார். அவருக்கு நாம் யாதொரு கைம்மாறும் செய்யவியலாது. இச்சுப தினத்தில் நம் எல்லேம்மனத்திலும் மகிழ்ச்சி நிறைந்து வழிகையில் ஓரெண்ணம் சிறிது துயரத்தைத் தருகின்றது: நாளைத் தம் மகனார்க்கு முடிசூட்டுதலைக் காணத் தசரதர் இங்கில்லையே என்ற நினைவே. அத்துயரத்தை மாற்றுவது வேறோர் எண்ணம் : இராமசந்திரருக்கு இன்று வயது இருபத்தைந்தன்று, முப்பத்தொன்பது. இவர் கடந்தபதினான்கு வருஷமும் பெற்ற அனுபவம் பெரிது; புகழ் நீண்டது. எல்லாம் ஈசன் செயல்.”

அடுத்தநாள் ஐம்பத்தாறு தேசத்து அரசர்களும் இரு மொழி வல்லுநரும் கூடின சபையிலே

“அரியணை யனுமன் றாங்க, அங்கதன் உடைவா ளேந்த,
பரதன் வெண் குடைக விக்க, இருவருங் கவரி வீச,
விரைசெறி குழலி யோங்க, வெண்ணை யூர்ச் சடையன் தங்கள் மாபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி,”

இதன்பின் பலயாண்டு மன்னுயிரைத் தன்னுயிர்போல அறமுறை திறம்பாது ஓம்பினான் இராமன். இதனாலன்றோ தருமராச்சியம் எஃதாயினும் ஆகுக, அதற்கு இராமராச்சியம் எனப் பெயர்வந்தது. இராமனுக்கும் சீதைக்கும் குசன் இலவன் என மக்களிருவர் பிறந்தனர். இராமன் பாண்டு அரசியல் நடத்தி முதிர்வுற்றபோது, தன் மக்களில் மூத்தவ னாகிய குசனுக்கு முடிசூட்டி, தான் சீதையோடு வானப் பிரஸ்தாச்சிரமம் புகுந்து கடவுளடி மறவா தவனாய்த் தவஞ் செய்து பரமபதமடைந்தனன்.

தமிழெம் செவிக்குள் அமிழ்தினு மினிக்க!
கம்பன் பெயரென்றும் அம்புவி நிலைக்க!
ஈழமும் பாதமும் வாழியர் வாழ்க!

உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும்: நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யான்எவன்,
தலைவன் ; அன்னவற் கேசரண் நாங்களே.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *