அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

15. ஒழிவிலொடுக்கம்

1854-ல் ஐயா தொண்ட மண்டலச் சதகத்தைப் பார்வையிட்டு விளக்கமளித்தார்- கொண்ணூர் ஐயாசாமி விரும்பியபடியே, இதைக் காஞ்சி சபாபதிப் புலவரும் அட் டாவதானம் சபாபதிப் புலவரும் வியந்தனர்.

ஒழிவிலொடுக்கம் சுத்தாத்வைத நூல்களிற் சிறந்தது. அதைப் பார்வையிட்டு ஐயா குறிப்புரையும் எழுதி யுதவினார். அவர் பார்வை யிட்டதே இன்றும் வழங்குகிறது. மனம் நானென்று கிளம்பாது, தற்போதம் ஒழியச் சிற்போதம் ஒழியாமல் புலனொடுங்கி, கரண மொடுங்கி சீவன் சிவத்தி லொடுங்கி அறிவாயிருக்கும் இன்ப நிலையை நூல் தெளிவாக விளக்கும்.

என்னாணை என்னாணை என்னாணை ஏகமிரண் (டு) என்னாமற் சும்மா இரு வென்று சொன்னான் திருஞான சம்பந்தன் சீர்காழி நாட்டான் அருளாளன் ஞானவினோ தன்.

நாயேறி வீழ்ந்தென் நடாத்துகிலென் ஞானிக்குப்
பேயாஞ் சகம் பழித்தென் பேணுகிலென் தோயார்
பெருமை சிறுமையிலை; பின்னுமுன்னு
மில்லை வரைவற்று வேண்டியசெய் வார்

(ஒழிவிலொடுக்கம்)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *