அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

5. சோறுபோடாதே

சாகாக் கல்விகற்ற அருட்புலவனைச் சபாபதிப் புலவர் வெறுத்தார். தேனும் பாலும் அமுதுமெனத்தித்திக்கும் அவனது பாடல்களைக் கண்டு மனங்கறுத்தார்; “இப்படிப் பாடுகிறவன் இலக்கண இலக்கியந் தெரிந்தால் நம்மை மிஞ்சிவிடுவான் ” என்று பாடம் சொல்லுவதை நிறுத்தி விட்டார்; தம்பி படியாது திரிவதை அண்ணலும் சினந்து சீறினார். “ஐயோ தம்பி வீணாகத்திரிகிறானே கெட்டது குடி” என்று வெதும்பினார். படித்துரைத்தார், இடித்து ரைத்தார், மனமலுத்தார்; பயனில்லை; அவன் போக்கு இவருக்குத் தெரியாது. முடிவில் “போ வெளியே”, என்று துரத்தினார். “இவனுக்குக் சோறு போடாதே, துணி தராதே, இருக்க இடந்தராதே” என்று மனைவிக்குச் சட்டம் போட்டார்! சட்டமென்றால் சட்டந்தான்!

அண்ணி கருணைச் செல்வி; ; கணவன் வெளியே சென்ற நேரத்தில் இராமலிங்கத்தை எதிர் பார்ப்பாள்; பிள்ளை நாணிக் கோணிக் கொல்லை வழியே நுழைவான். அண்ணி மனங்குழைந்த அன்புடன் சோறூட்டுவாள்; அண்ணன் வருவானே என்று பயந்து பயந்து விரைந்து விரைந்துண்டு இராமலிங்கம் புழக்கடை வழியே ஓடிப் போவான்; எங்கே? கந்தகோட்டம் அல்லது திருவொற்றியூர் ; அங்கே என்ன செய்வான்?இறைவனுக்குப் பாமாலை சூட்டுவான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *