
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
பன்னிரண்டாவது கதை
நமது தீட்சிதர் ஒரு முறைசென்னைக்கு மார்ச்சுமாதம் வந்து நமது சிநேகிதர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்தார். மார்ச்சு மாதம் 31-ந் தேதி வந்தபொழுது, “நாளை ஏப்ரல் முதல் தேதியல்லவா? அநேக வருஷங்களாயின, இந்த ஏப்ரல் பூல் வழக்கம் கொண் டாடி, நாளைத்தினத்திற்கு ஏதாவது ஒரு புதிய யுக்தி செய்ய வேண்டு” மென்று தீர்மானித்தார்.
சென்னையில் இவருடைய அத்யந்த சிநேகர்களுள் முத்துராம லிங்கய்யர் என்று ஒருவர் இருந்தார்.அவர் தன்னுடைய சினேகிதர்களுக்கு, தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததற்காக, ஒரு சிற்றுண்டி பார்டி கொடுப்பதாக, நம் தீட்சிதர் இருபது இருபத்தைந்து கார்டுகள் அச்சிட்டு, அவருடைய சிநேகிதர்களுக்கெல்லாம் மறுநாட் காலை (எப்ரல் மாதம் முதல் தேதி) போய்ச் சேரும்படி தபாலில் போட்டு விட்டார்; தனக்கும் ஒரு கார்டு போட்டுக்கொண்டார்.
அந்தக் கார்டில் கூறப்பட்டபடி சரியாக நாலுமணிக்கெல்லாம், இரண்டு மூன்று பெயர்களுடன் முத்துராமலிங்க ஐயர் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து, எல்லோருமாக, அவரிடம் சந்தோஷம் விசாரித்தார்கள். நடந்த சூதையறியாத முத்துராமலிங்க ஐயர் எதற்காக இக்கொண்டாட்டமெல்லாம் என்று கேட்க, ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக’, என்று சொல்லித் தங்களுக்குத் தபாலில் கிடைத்த கார்டுகளை அவருக்குக் காட்டினார்கள்; நமது தீட்சிதரும் தனக்குத் தானே போட்டுக்கொண்ட கார்டைக் காண்பித்தார்.
முத்துராமலிங்க ஐயர் திடுக்கிட்டுப் போனார்! இதற்குள்ளாக மற்ற கிகிேதர்களும் வந்து ஒவ்வொருவராக சுப சமாசரம் விசாரித்தார்கள். பிரகு இது யாரோ செய்த சூது என்று அறிந்தவராய்ச் சிரித்துவிட்டு, அக்கார்டு ஒன்றை மறுபடியும் படித்துப் பார்த்து அதில் ஏப்ரல் மாதம் முதல் தேதி என்று போட்டிருந்ததைக் கவனித்து தனது சிரைக்கர்களுள் யாரோ செய்த விளையாட்டென்று களுக்கு அறிவித்து. “ஏன் தீட்சிதரே! நீங்கள் செய்த சூது தானோ! என்று கேட்க, நமது தீட்சிதர் “என் பாவமா! இதோ எனக்கு வந்த கார்டைப் பாருங்கள்! நானே என்னை ஏமாற்றிக் கொள்வேனா?” என்று உறுதியாய்க் கூறினார்.
முத்துராமலிங்க ஐயர்.உடனே வீட்டிற்குள்ளே போய், சமயற்காரனைச் சீக்கிரம் உப்புமா தயார் செய்யச் சொல்லி, கடையிலிருந்து பழதினுசுகள் வரவழைத்து, காப்பியுடன் வந்திருந்த எல்லா நண்பர்களுக்கும் கொடுத்தார். எல்லோரும் தாங்கள் ஏமாந்த விதத்தைச் சொல்லி நகைத்தார்கள்.
அவர்களுள் ஒருவராகிய தேசிகாசாரியார் என்பவர் “ஐயோ! வீட்டில் என் மனைவி தயார் செய்து கொண்டிருந்த பட்சணத்தையும் வேண்டாம் முத்துராமலிங்க ஐயர் வீட்டில் இன்று சிற்றுண்டி பார்டி என்று சொல்லி வந்தேனே !” என்றார். கோபால் சாமி முதலியார் என்பவர் நல்ல வேடிக்கை! என் மோட்டார் வண்டிக்காரன் இன்று லீவு வாங்கிக்கொண்டு போனதால் நான் மைலாப்பூரிலிருந்து டிராமில் அல்லவா வந்தேன்” என்றார். இந்த மாதிரியாக ஒவ்வொருவரும் தாங்கள் ஏமாந்த விதத்தைப்பற்றி எடுத்துச் சொல்லி நகைப்புடன் அன்று சாயக் காலத்தைக் கழித்தனர்.
பிறகு அவர்களெல்லாம் விடை பெற்றுக்கொண்டு போகும் போது, “ஓய்!தீட்சிதரே, இந்த யுக்தியை நீர்தான் செய்திருக்க லேண்டும். உம்மையன்றி வேறு ஒருவருக்கும் இப்படிச் செய்யத் தெரியாது! நிஜத்தைச் சொல்லும்” என்று வற்புறுத்திக் கேட்க, நமது தீட்சிதர் ஆம் என்று ஒப்புக்கொண்டார்.
ஆயினும் நமது தீட்சிதர் வேடிக்கையாயாரம் பித்தது பிறகு கொஞ்சம் வினையாய் முடிய இருந்தது. எப்படியெனில், வாஸ்தவமாக அச்சமயம் முத்துராமலிங்க ஐயருடைய மனைவி பூர்ண கர்ப்பவதியாயிருந்தாள்; பிரசவத்திற்காக திருநெல்வேலிக்குத் தன் தகப்பனார் வீட்டிற்குப் போயிருந்தாள். மயிலாப்பூரிலிருந்து தீட்சிதர் புறப்பட்ட பொழுது, அவர் பக்கத்து வீட்டில் குடியிருந்த, முத்து ராமலிங்க ஐயர் மைத்துனர் ‘எங்கே போகின்றீர்’ என்று கேட்க “உன் மைத்துனருக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக எங்களுக் கெல்லாம் டீ பார்டி கொடுக்கிறார்” என்று பதில் உரைத்து விட்டு புரசைவாக்கம் வந்தார்.
அந்த மைத்துனருக்கு அடங்காக் கோபம் மூண்டு, உடனே தன் தகப்பனாருக்கு, தன் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்த சமாசாரம் தனக்குத் தெரியாததற்காக வருத்தப் பட்டதன்றி, தன் மைத்துனன் மற்றவர்களை யெல்லாம் அதன் பொருட்டு வைத்த டீ பார்டிக்கு அழைத்த போதிலும், தன்னை அழைக்கவில்லை என்று கடிந்து ஒரு கடிதம் எழுதினார்.
உடனே அங்கிருந்து அவரது தகப்பனார், “இன்னும் பிரசவமே ஆகவில்லையே, இதெல்லாம் என்ன கதை?” என்று பதில் எழுதினார். அதன் பேரில் அந்த மைத்துனர், அக்கதத்தைக் கொண்டுபோய் நமது தீட்சிதரிடம் காண்பித்து இதென்ன என்னிடம் பொய் யுரைத்திரே!” என்று கேட்க, நமது திட்சிதர் “பொய்யொன்றுமில்லை! உன் மைத்துனன் இன்னொரு தாரம் கலியாணம் செய்து கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா? அந்த தாரத்திக்குப் பிறந்த குழந்தைக்காகப் பார்டி கொடுத்தார் என்று சமாதானம் சொன்னார்.
அதன் பேரில் அந்த மைத்துனர் இன்னும் அதிக கோபங் கொண்டவராய், “முத்துராமலிங்க ஐயர், இரண்டாம் தரமொன்றை நமக்கெல்லாம் தெரியாமல் கலியாணம் செய்து கொண்டிருக்கிறாராம். அந்த தாரத்திற்குத்தான் ஆண் குழந்தை பிறந்ததாம், இதென்ன மோசம்!” என்று தன் தகப்பனாருக்குத் தந்தி கொடுக்க, அந்த தகப்பனார் மிகவும் கோபாவேசங்கொண்டவராய் முத்துராமலிங்க ஐயருக்கு,”இப்படி அநியாயம் செய்யலாமா?” என்று நான்கு பக்கம் கொண்ட ஒரு கடிதம் எழுத, அக்கடிதத்தை எடுத்துக்கொண்டு முத்துராமலிங்க ஐயர், நமது தீட்சிதர் வீட்டிற்குப் போய், ‘நீர் செய்த வேடிக்கையின் பயனைப் பார்த்தீரா? என் மாமனார் இப்படி என்மீது வீணாகப் பழி சுமத்தியிருக்கிறாரே! இதனின்றும் நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் மென்று வேண்டிக்கொள்ள நமது தீட்சிதர், மனம் மிகவும் இரங்கினவராய், அவரைச் சாமாதானம் செய்துவிட்டு, அன்று மாலை ரெயிலில் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுப்போய், அவரிடம் தான் செய்ததை யெல்லாம் கூறி, அவரைச் சமாதானப் படுத்திவிட்டு வந்தார்.



