தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

நான்காவது கதை

கும்பகோணத்தில் ஓர் அக்கிரஹாரத்தில் வசித்துக்கொண்டிருந்த எண்பது வயதுக்கு மேற்பட்ட ஓர் வயோதிகப் பிராம்மணர் இறந்து போனார். சுமார் எழுபது வயதுக்கு மேற்பட்ட அவரது மனைவியாகிய விதவை, தசாஹஸ் கழிந்து ஒரு வருஷமாகியும் தினம் காலை நான்கு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து வீதி வாசலண்டை உட்கார்ந்து ஒப்பாரி பாடி அழுது கொண்டிருந்தார்கள். எத்தனை மாதம் வீதியிலுள்ளவர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? இந்த அம்மாளிடம் எத்தனையோ பேர்கள் சொல்லி யும் அந்த அம்மாள் காலையில் எழுந்தவுடன் உரக்க அழும் வழக்கத்தை விட வில்லை.

அதன் பேரில் சிலர் நமது தீட்சிதர் தான் இதற்குச் சரியான யுக்தி சொல்வார் என்று அவரிடம் போய், எங்கள் வீதியில் இந்த அம்மாள் தினம் ரோதனை பண்ணுகிறார்கள். நாங்கள் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை; ஒரு வாரம் பத்து நாள் ஒரு மாசம் பொறுக்கலாம். ஒரு வருஷத்திற்கு மேலாகிறது. துக்கம் என்பது எவ்வளவுதான் இக்கிழவிக்கு இருந்தபோதிலும் இதை வெளியில் இப்படிக் காட்டுவானேன்?

அயலார் மெச்சிக்கொள்வதற்காக இப்படிச் செய்கிறதுபோல் எங்களுக்குத் தோற்றுகிறது. காலையில் எழுந்திருக்கும் போதெல்லாம், எத்தனை நாள் இந்த அழுகுரலை நாங்கள் கேட்பது? இதை எப்படி யாவது நீங்கள் தான் தடுக்க வேண்டும்” என்று தெரிவிக்க, நமது தீட்சிதர் அவர்கள், “சரிதான் நீங்கள் போங்கள். நாளை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று அவர்களுக்குச் சொல்லியனுப்பி விட்டு, அன்று தன் தலையை மழுங்க க்ஷவரம் செய்து கொண்டு, மறுநாட்காலை நான்கு மணிக்கு முன்னதாகவே, விதவையைப் போல் தானும் ஒரு புடவையைக் கட்டிக் கொண்டு அந்த விதவை அம்மாள் வீட்டிற்கெதிரில் போய் உட்கார்ந்துகொண்டு, பெரிய குரலுடன் தான் இறந்தவரைக் குறித்து ஒப்பாரி பாடி அழ ஆரம் பித்தார்.

இந்தச் சூதை யறியாத அந்த விதவையம்மாள், தன் காலஞ்சென்ற புருஷனுடைய பந்து யரோ வந்து அழுகிறாள் பாபம் என்று எண்ணி, கதவைத் திறந்துகொண்டு வந்து, தானும் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டு வழக்கம் போல் அழ ஆரம்பித்தார்கள்.

இரண்டு பேரும் அழும் பெருங் கூச்சலைக் கேட்ட அந்த வீதியில் வசிக்கும் பிராம்மணர்கள், இதென்னடா !அழுகுரல் ஒன் றிற்கு இரண்டாயது இன்று! என்று கலங்கினவர்களாய் ஒவ்வொருவராக அந்த வீட்டு வாசலண்டை வந்து சேர்ந்தார்கள். பொழுதும் பலபலவென்று விடிந்தது. உடனே நமது தீட்சிதர், அழுகையை நிறுத்தித் தன் முக்காட்டைக் களைய, ரகஸ்யம் வெளியாயிற்று, அந்த விதவையம்மாள் என்ன செய்வாள் பாயம்? எதிரிலிருப்பது ஆடவனென்றும் இன்னாரென்றும் அறிந்தவர்களாய் வெட்சி, “படுபாவி! நீயா இப்படிச் செய்தாய்!” என்று அவரை வைது விட்டுச் சரேரென்று தன் வீட்டிற்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்கள். மறுநாள் முதல் அந்த அம்மாள் அந்த வழக்கத்தை விட்டனர்.

வீதி வாசிகளும் நமது தீட்சிதரைத் துதித்துச் சந்தோஷித்ததனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *