நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

15. “ஆளானோம் தங்களுக்கே ஐயா!”

பெருமானவர்களின் மீது தொடக்க காலத்து முஸ்லிம்கள் எவ்வளவு உண்மையான அன்பு கொண் டிருந்தார்கள் என்பதைக் கீழ்க்கண்ட நிகழ்ச்சி விளக்கும். உஹத் சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரிகளின் தாக்குதல் பலமாக இருந்தது. முஸ்லிம்களின் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகமாயிருந்தது. இடையில் பெருமான் அவர்கள் போரில் கொல்லப் பட்டு விட்டதாகப் புரளி வேறு கிளப்பிவிடப்பட் டிருந்தது.இதனால், சில முஸ்லிம்கள் போர்க்களத்தி லிருந்து பின்வாங்கி மதினாவிற்குத் திரும்பினர்.

அப்படித் திரும்பி வந்தவர்களை நோக்கி, வீட்டில் இருந்த பெண்கள், நபிபெருமானை விட்டு விட்டுத் திரும்பி வந்ததற்காக இடித்துரைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள், பெருமானவர்களின் நிலையை நேரில் அறிந்து கொள்வற்காகப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள்.

பெருமானர்களின் நலத்தை விசாரித்துக் கொண்டு சென்ற பெண்களிலே அன்சாரி குலத்தைச் சேர்ந்தவள் ஒருத்தி. போர்க் களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சிலர் அவளை வழியில் சந்தித்தனர். அவளைக் கண்டவுடன் அவர்கள் துயரத் துடன், “அம்மா, உன் தந்தை சண்டையில் உயிர் துறந்து விட்டார்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட அவள் தன் துயரத்தை அடக்கிக் கொண்டு, “நாம் அனைவரும் ஆண்டவனுக்காகவேயிருக்கிறோம். அவனிடமே மீண்டும் போய்ச் சேருவோம்” என்று கூறினாள். தொடர்ந்து, “பெருமான் அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

அந்த மனிதர்கள் அதற்கு மறுமொழி கூறாமல், (“அம்மா, உன் சகோதரரும் போரில் இறந்து விட் டாரே!” என்று கூறினார்கள். அதைக் கேட்ட பின்னரும் அவள் தன் துன்பத்தைச் சற்றேனும் வெளிக் காட்டாமல், “நாம் அனைவரும் ஆண்டவனுக் காகவேயிருக்கிறோம். அவனிடமே மீண்டும் போய்ச் சேருவோம்” என்று கூறினாள். தொடர்ந்து, “பெருமான் அவர்கள் எப்படி யிருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

அந்த மனிதர்கள் அதற்குப் பதில் உரைக்காமல், “அம்மா, உன் கணவரும் கொல்லப்பட்டுவிட்டாரே!” என்று கூறினார்கள். அதைக் கேட்ட அந்தப் பெண் ணால் தன் துயரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் பெருமூச்சு வீட்டுக் கொண்டே, நாம் அனைவரும் அல்லாவுக்காகவே இருக்கிறோம். அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறினாள். மறவாமல், பெருமானவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.

பெருமான் அவர்கள் நலமாக இருக்கிறார்கள்” என்று அவர்கள் சொன்ன பின், அவளுக்கு இருந்த துயரமெல்லாம் பஞ்சாய்ப் பறந்து போயிற்று. அமைதி நிறைந்த உள்ளத்தோடும், பெருமானைக் காணப் போகிறோம் என்ற ஆவலோடும் அவள் களம் சென்றாள்.

களத்திலே பெருமான் அவர்களின் திருமுகத்தை நேரில் கண்டவுடன், அவர் தன்னை அடக்க முடியாத உணர்ச்சியுடன் “பெருமான் அவர்களே, தாங்கள் உயிருடன் இருக்கும் பொழுது எங்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவை யாவும் அற்பமாகி விடுகின்றன. தீன் என்னும் சன்மார்க்கத்தின் மன்னரே, நானும் என் தந்தையும் சகோதரரும், கணவரும் தங்களுக்கே ஆளாகிவிட்டோம்! உலகம் தங்களைப் பெற்றிருந்தால் உய்யும்! நாங்கள் இருந்தால் என்ன, இல்லா விட்டால் என்ன? தாங்கள் இருப்பதே பெருமகிழ்ச்சி! என்று கூறி உள்ளங் களி கூர்ந்தாள்.

ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற வந்த திருத்தூதர் பெருமான் என்ற  உண்மையான நம்பிக்கை யின் விளைவேயன்றோ இந்த மெய்யன்பு!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *