நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

24. நிழலை வெறுத்த அன்பர்

ஒரு நாள் நடுப்பகலில், ஸஹாபாக்களில் ஒருவர் மதினாவில் உள்ள தம் தோட்டத்தில் நிழலில் உட் கார்ந்து இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந் தார். அப்போது அவருக்குப் பெருமான் அவர்களின் நினைவு ஏற்பட்டது. ஷாம் தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் படைதிரளும் செய்தி கேட்டு, அங் கேயே சென்று எதிர்த்துப் போரிடப் பெருமானவர்கள் முப்பதினாயிரம் வீரர்களுடன் சென்று கொண்டிருந் தார்கள். இந்த நினைவு ஏற்பட்டதும் அந்த ஸஹாபாவுக்கு மனம் கொதித்தது. “அங்கே பெருமானர்கள் வெயிலில் காய்ந்து சென்று கொண்டிருக்க, இங்கே நீ இன்பமா அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். உடனே தம் ஒட்டகத்தை ஆயத்தப் படுத்தச்செய்து, பெருமானவர்கள் சென்ற திக்கில் செலுத்தினார். சில நாட்களில், பெருமானவர்களின் படைகளோடு அவரும் சென்று சேர்ந்து கொண்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *