நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

16. உயிருக்குயிரான பெருமான்

குறைஷி ஒருவனிடம் ‘ஸைத்’ என்பவர் அடிமை யாக இருந்தார். அந்தக் குறைஷி முஸ்லிம் ஆகிய ஸைத்தை வெட்டிக் கொல்ல முடிவு செய்தான். அதற் காக ஒரு நாள் குறிப்பிட்டு குறைஷி இனத்தவரில் தலைமையாக உள்ள அனைவரையும் வேடிக்கை பார்க்க அழைத்திருந்தான். அப்படிக் கூடிய தலைவர்களிலே, அபூஸுபியான் என்பவரும் ஒருவர்.

கொலை செய்வதக்குச் சிறிது நேரம் இருக்கும் போது, அந்த அபூஸூபியான் ஸைதை நோக்கி. “ஸைத் இப்போது, உமக்குப் பதிலாக முஹம்மதை வெட்டுவதாக இருந்தால், அது இருந்தால், அது உம் அதிர்ஷ்டந் தானே!” என்று கேட்டார்.

“நபிபெருமான் அவர்களின் பாதத்தில் முள் தைப்பதால் என் உயிர் தப்பும் என்று அறிந்தாலும் அதை நான் வரவேற்க மாட்டேன். அவர் காலில் முள் குத்துவதைக் காட்டிலும் என் உயிரை இழப்பதே பெரும் பேறென நினைக்கிறேன். ஆகவே, என்னை வெட்டிக் கொல்லுங்கள். நான் அஞ்சவில்லை. ஆண் டவன் மீது சத்தியம்!” என்று கூறினார் ஸைத்.

“முஹம்மதைச் சேர்ந்தவர்கள் அவரை எவ்வளவு அன்புடன் கொண்டாடுகிறார்களோ, அவ்வளவு அன்புடன் வேறு யாரையும் கொண்டாடுவதில்லை’ என்று அபூஸுபியான் கூறினார்.

அதன் பின் சிறிதும் இரக்கம் காட்டாமல் ஸைத்தை வெட்டிக் கொன்று விட்டார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *