அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

57. அருட்சமயம்

அடிகள் சத்திய ஞான சபையில் அடிக்கடி அருட் சொன்மாரி பொழிந்து ஆயிரக்கணக்கான அன்பர்க்கு அருளுதய மாகச்செய்வார்; இடையிடையே ‘உங்களைக் கைவிடேன்’ என்பார். வள்ளலார் சொற்பொழிவின் பொருளான அருணெறியை ஈண்டுச் சுருக்கிக் கூறுவோம். சாதி சமயச் சழக்கு களுக்கெட்டாத சோதி நெறியான சுத்த சமரச சன்மார்க்கத்தை இவர் வழிகாட்டி யுறுத்தி வந்தார். இவர் சன்மார்க்க சமயத்தைக் கீழ்வரும் இரண்டு செய்யுட்களும் தெற்றென விளக்குகின்றன……

எவ்வுயிரும் பொதுவெனக்கண் டிரங்கியுப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தஞ் செயலனைத்துந் திருவருளின்
செயலெனவே தெரிந்தே னிங்கே
கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர்
தமக்கேவல் களிப்பாற் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர்சீ ரோதிடவென்
வாய்மிகவு மூர்வ தாலோ!
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந்
தம்முயிர்போ லெண்ணி யுள்ளே
ஒத்துரிமை யுடையவரா யுவக்கின்றார்
யாவரவர் உளந்தான் சுத்த
சித்துருவா யெம்பெருமான் நடம்புரியும்
இடமெனநான் தெரிந்தேன்; அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென்
சிந்தைமிக விழைந்த தாலோ !

என்றவாறு அருள், அன்பு, உயிரிரக்கம், சமரசம் இவையே வள்ளலார் மதத்தின் சுருதி மொழிகள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !