அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

62. சன்மார்க்கக் கொடி

நமது சன்மார்க்கக் கொடியின் பொருளென்ன? நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவ மத்தியில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெண்மை, மேற்புறம் மஞ்சள். அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறுவதும், இறங்குவதும் அனுபவத்தால் விளங்கும். இவ்வடையாளமே நமது கொடி. அகமாகிய ஆன்மப் பிரகாசமே ஞானசபை. அந்தப் பிரகாசத்துக்குள் இருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம்; இதுவே ஞானாகாச நடனம்! அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்த நடனமென்றும் சொல்லுகின்றது. அருளே அவனை யடையும் நெறி. இவ்வருள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைப்பதால் எய்தும். பிற உயிர் துன்புறாது நடத்தலே ஜீவ காருண்யம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !